காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் வருத்தமோ, கோபமோ இல்லை - சசி தரூர்


காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் வருத்தமோ, கோபமோ இல்லை - சசி தரூர்
x

கேரள மாநில காங்கிரசில் யாரிடமும் வருத்தமோ, கோபமோ இல்லை என சசி தரூர் எம்.பி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யான சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூனகார்வே தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவரானார்.

இதனிடையே, சசிதரூர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார்.

மேலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இது கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமும் தனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. யாரிடமும் பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று சசி தரூர் எம்.பி கூறியுள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , "எனக்கு யார் மீதும் வருத்தமோ கோபமோ இல்லை. யாரையும் நான் குற்றம் சொல்லவோ, குற்றம் சுமத்தவோ இல்லை. என் முடிவில் இருந்து எந்த புகாரும் பிரச்சினையும் இல்லை. எல்லோரையும் ஒன்றாக பார்ப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாரிடமும் பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

"அவர்கள் என்னிடம் பேசினால், நான் பதிலளிக்க மாட்டேனா? ஒருவரோடொருவர் பேசுவதையோ பேசுவதையோ தவிர்ப்பதற்காக நாங்கள் மழலையர் பள்ளியில் இல்லை. ஆனால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இல்லை என்றால், நாங்கள் எப்படி பேசுவோம் ?" இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story