பீகாரில் வெடித்த சர்ச்சை: பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாரவிடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற முனைப்பு காட்டும் பாஜக


பீகாரில் வெடித்த சர்ச்சை: பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாரவிடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற முனைப்பு காட்டும் பாஜக
x

நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை என்ற நடைமுறை தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.

பாட்னா,

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை என்ற நடைமுறை தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் இதர கட்சிகள், பீகாரில் ஆளுங் கட்சியாக உள்ள பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சிக்கும் இடையே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பீகாரின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30% முதல் 70% வரை முஸ்லிம் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நமாஸ் அல்லது வெள்ளிக்கிழமை தொழுகைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் மூடப்படும்.

முஸ்லிம் தலைவர்கள் அறிவுறுத்தலின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதனால், ஞாயிற்று கிழமைகளில் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரியர்களால், தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட இயலவில்லை என சில ஆசிரியர்கள் கூறுகின்றனர் என இந்து சமூகத்தினர் சிலர் கூறியுள்ளனர்.

எனினும், இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை என்றும் எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் கல்வி துறையினர் கூறுகின்றனர்.

பீகார் மாநிலத்தின் சீமாஞ்சல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுவது குறித்த "நிலை அறிக்கையை" வெளியிடுமாறு பீகாரின் கல்வித்துறை மந்திரி விஜய் சவுத்ரி கேட்டுள்ளார். இருப்பினும், பள்ளி விடுமுறையை சரி செய்வது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

இதற்கிடையில், கிஷன்கஞ்ச், பூர்னியா, அராரியா மற்றும் கதிஹார் மாவட்ட அதிகாரிகள் இந்த நடைமுறை எப்படி அல்லது எப்போது தொடங்கியது என்பதில் சரியான விளக்கமளிக்கவில்லை.

அப்பகுதியில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நடைமுறையில் இருக்கலாம் என்று கல்வி அமைச்சகம் மதிப்பிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் இதை சரிபார்க்க கணக்கெடுப்பு மேற்கொண்டால் மட்டுமே சரியான எண்ணிக்கை தெரியவரும்.

சமீபத்தில் பீகாரின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் அரசு, வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியுள்ளது. பீகாரிலும் அதையே செய்ய பாஜக விரும்புகிறது.

மாநிலத்தில் "வகுப்புவாத பிளவை" உருவாக்க பாஜகவின் முயற்சி என்று எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூறியுள்ளது.


Related Tags :
Next Story