புதுச்சேரி அமைச்சராக பதவி ஏற்றார் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன்

பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல் மந்திரி ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அமைச்சராக பதவி ஏற்றார் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.

திருமுருகனுக்கு கவர்னர் மாளிகையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல் மந்திரி ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவருக்கு முதல் மந்திரி ரங்கசாமி, அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பதவியேற்பு விழா முடிந்ததும் திருமுருகன் சட்டசபைக்கு வந்து தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com