ரெயில்களில் 'ஓசி' பயணம்; ரூ.32.16 கோடி அபராதம் வசூல்


ரெயில்களில் ஓசி பயணம்;   ரூ.32.16 கோடி அபராதம் வசூல்
x

ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.32.16 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.

பெங்களூரு: ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் மேற்கொள்பவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் 2021-2022-ம் ஆண்டில் தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் 'ஓசி' பயணம் செய்த 5 லட்சத்து 45 ஆயிரம் பயணிகளிடம் இருந்து டிக்கெட் பரிசோதகர்கள் ரூ.32.16 கோடி அபராதம் வசூலித்து உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, '2020-2021-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் 'ஓசி' பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.7.29 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளதால் இந்த நிதி ஆண்டில் இன்னும் கூடுதலாக அபராதம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.


Next Story