கண்ணாடி பாட்டிலுக்குள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்முவின் கையடக்க படத்தை வரைந்து சாதனை!


கண்ணாடி பாட்டிலுக்குள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்முவின் கையடக்க படத்தை வரைந்து சாதனை!
x

ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்முவின் சிறிய அளவிலான படத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த எல் ஈஸ்வர் ராவ் மிகச்சிறிய அளவில் படம் வரையும் 'மினியேச்சர் ஆர்டிஸ்ட்' நுண் ஓவியக் கலைஞர் ஆவார்.

அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்முவின் சிறிய அளவிலான படத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக அவர், பல தலைவர்களின் சிறிய அளவிலான படங்களை பாட்டிலுக்குள் வரைந்து சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதை சிறப்பிக்கும் விதமாக, ஜோ பைடனின் சிறிய அளவிலான படத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து வாழ்த்தினார்.

இந்நிலையில், திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய உருவத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து உள்ளார்.


Next Story