ஒடிசா: கனமழையால் கரைபுரண்டோடும் மகாநதி.. குடியிருப்புகளை மூழ்கடித்த வெள்ளம்
ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி ஆற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்தது.
கட்டக்,
ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கின. மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் குழந்தைகளும் பெண்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
படகுகள் மூலம் ரேசன் பொருட்களை வழங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்து 757 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story