ஒடிசா: பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி உயிருடன் தீயிட்டு எரித்த கொடூரம்..!


ஒடிசா: பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி உயிருடன் தீயிட்டு எரித்த கொடூரம்..!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 July 2022 4:58 PM IST (Updated: 26 July 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த பள்ளி மாணவியை உயிருடன் தீயிட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பரின்கியா என்ற பகுதியில் தயானதீசட்னா என்பவரின் வீட்டில் அவரின் மனைவியிடம் பள்ளி மாணவி ஒருவர் டியூசன் சென்று வந்துள்ளார்.

டியூசன் படிக்கவந்த மாணவியிடம் பாலியல் ஆசைக்கு இணங்க தயானதிட்சனா வற்புறுத்தியுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி, ஒரு கட்டத்தில் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது தயானதீட்சனா மாணவியை இடைமறித்துள்ளார். அப்போது தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை மாணவியின் மீது ஊற்றி உயிருடன் தீயிட்டு கொன்றார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தயானதீட்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த மாணவியை உயிருடன் தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story