ஒரே நாளில்... ஒரே இடத்தில்... பிரதமர் மோடி- ராகுல்காந்தி... சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார்.
அகமதாபாத்,
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வழக்கமாக காங்கிரஸ், பாஜக மோதலை காணும் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆர்வம் காட்டுவதால் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் முற்றுகை பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். அன்றைய தினம் வால்சாத் செல்லும் அவர், அங்கு பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
20 ஆம் தேதி சோம்நாத் கோவில் செல்லும் அவர், சவுராஷ்டிராவில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் சுரேந்திரா நகர், பாரூச் மற்றும் நவ்சாரியில் பிரசாரம் செய்கிறார். இந்த முற்றுகை பிரசாரத்தின் போது பிரதமர் மோடி வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாளில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் நவ்சாரியை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.