குடகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


குடகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:46 PM GMT)

குடகு மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

குடகு:-

குடகு மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அய்யப்பா கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கேரள பெண்கள் தங்கள் பாரம்பரியப்படி சேலை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு கலந்து கொண்டனர்.

மேலும் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டியும் நடந்தது. இதுதவிர வாலிபர்களுக்கு கார் பந்தயமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு சென்னய்யனகோட்டே கிராம பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் பரிசுகளை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story