'கொலீஜியத்தில் விவாதிப்பதை பொதுவெளியில் வெளியிட முடியாது' - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


கொலீஜியத்தில் விவாதிப்பதை பொதுவெளியில் வெளியிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x

கோப்புப்படம்

கொலீஜியத்தில் விவாதிப்பதை பொதுவெளியில் வெளியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்ற கொலீஜிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு தகவல் அறியும் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் தகவல் தர மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.

அதில், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்கும் பல நீதிபதிகளை கொண்ட கொலிஜீயத்தில் எடுக்கப்படும் தற்காலிக முடிவுகளை பொதுவெளியில் வெளியிட முடியாது. இறுதியாக எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படுகின்றன. எனவே, 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கொலீஜிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலீஜிய உறுப்பினராக இருந்த முன்னாள் நீதிபதி ஊடகங்களில் தெரிவித்த கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.


Next Story