குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாஜகவிற்கு சவால் விடும் கட்சி காங்கிரஸ் மட்டுமே - குலாம் நபி ஆசாத்


குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாஜகவிற்கு சவால் விடும் கட்சி காங்கிரஸ் மட்டுமே - குலாம் நபி ஆசாத்
x

இந்த இரு மாநிலங்களில் ஆம் ஆத்மியால் எதுவும் செய்ய முடியாது.

ஸ்ரீநகர்,

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவுக்கு சவால் அளிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இரு மாநிலங்களில் ஆம் ஆத்மியால் எதுவும் செய்ய முடியாது. ஆம் ஆத்மி கட்சியை வெறும் டெல்லி கட்சியாக மக்கள் பார்க்கின்றனர்.பஞ்சாபிலேயே ஆம் ஆத்மி செயல்பாடுகளில் மக்கள் திருப்தியாக இல்லை. இனி எந்தவொரு தேர்தலிலும் அவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவே மாட்டார்கள்.

காங்கிரஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அது அனைவருக்குமான கட்சி. காங்கிரஸ் கட்சி இந்து, முஸ்லீம் விவசாயிகளை ஒரே போலத் தான் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அனைவருக்குமான ஒரு ஆட்சியைத் தர முடியும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story