எதிர்க்கட்சிகள் 2029 தேர்தலை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர 2024 தேர்தலை அல்ல - பாஜக தலைவர்
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு செய்த பணிகளை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே நகரில் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர், பிரதமர் மோடியின் ஆளுமை, நாட்டு மக்களுக்கு அவர் செய்த பணிகளை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் மோடி தொடர்ந்து வேலை செய்து வருகிறார். ஹர் ஹர் திரங்கா பிரசாரம் மூலம் நாட்டுப்பற்று சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், எதிர்க்கட்சிகள் 2024 தேர்தலை பற்றி கவலைபடுவதை விட்டுவிட்டு 2029 தேர்தல் குறித்து சிந்திக்க வேண்டும்' என்றார்.
Related Tags :
Next Story