கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு


கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு
x

அடுத்த 12 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நிலச்சரிவு அபாயம் இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story