மேற்கு வங்கம்: பானிபூரி சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல் நலக்குறைவு
பானிபூரி சாப்பிட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது
ஹூக்ளி,
மேற்கு வங்க மாநிலத்தில் சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட பானி பூரியை வாங்கி சாப்பிட்ட நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஊராட்சியின் தோகாசியா பகுதியில் அமைந்துள்ள பானிபூரி கடையில் நேற்று அதனை வாங்கி சாப்பிட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இந்தத் தகவலை அறிந்து சுகாதாரத் துறையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவக் குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story