பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் பதுக்கிய செல்போன், சிம் கார்டு பறிமுதல்


பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் பதுக்கிய செல்போன், சிம் கார்டு பறிமுதல்
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:46 PM GMT)

பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் பதுக்கிய செல்போன், சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பரப்பன அக்ரஹாரா:

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் மற்றும் கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கழிவறைக்குள் ஒரு பாலிதீன் பை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். அவற்றை திறந்து பார்த்த போது 2 செல்போன்கள், ஒரு சிம் கார்டு மற்றும் சார்ஜர் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதிகள் செல்போன் பயன்படுத்திவிட்டு, அவற்றை கழிவறைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்போன் சிக்கிய விவகாரம் குறித்து அந்த பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story