குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கிய லாரி, பைக்..!


குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கிய லாரி, பைக்..!
x

குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்த சுமார் 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

1 More update

Next Story