டெல்லி விமான நிலையத்தில் ரூ.69 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்துடன் பயணி கைது
ரூ.69 லட்சத்திற்கும் அதிகமான தங்கத்தை கடத்திவந்த பயணி ஒருவர், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிக்சியில் மறைத்து வைத்திருந்த ரூ.69 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரியாத்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இருந்து வந்த இந்திய பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் இருந்த மிக்சி ஒன்றில் இரண்டு உலோக வடிவ தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் அந்த பயணியை கைதுசெய்தனர்.
கடத்திவரப்பட்ட தங்கமானது 1 கிலோ 573 கிராம் எடை கொண்டதாகவும், 69 லட்சத்து 99ஆயிரத்து ,504 ரூபாய் மதிப்பு கொண்டதாகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story