கனகதாசரின் சித்தாந்தங்களை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும்
கனகதாசரின் சித்தாந்தங்களை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று மண்டியா கலெக்டர் கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மண்டியா-
மண்டியா மாவட்டத்தில் கன்னட, கலாசாரத்துறை சார்பில் கன்னட கவி கனக தாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா, கனகதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கூறியதாவது:- கன்னடகவி கனக தாசர் ஜெயந்தி கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் மனதில் இருந்த அறியாமையை நீக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதில் கனகதாசரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கன்னட கலாசாரம் மற்றும் சமூகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவரது வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. மேலும் சாதி பிரிவினை மற்றும் மக்களிடையே நிலவிய மூடநம்பிக்கையை போக்கியவர். எனவே, அவரது சித்தாந்தங்களை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story