நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மனு: விசாரணை ஒருமாதத்திற்கு தள்ளிவைப்பு
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு அளித்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.
புதுடெல்லி,
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு அளித்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், நீட் தேர்வை சட்டமாக்கிய சட்ட திருத்தத்துக்கு தடை கேட்டு தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இந்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்துள்ளது.
Related Tags :
Next Story