மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற கோரிய மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற கோரிய மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற கோரிய மனு தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என கூறி இருந்தார். அந்த மனு மீதான விசாரணை பொறுப்பு நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் கூறியதாவது:-

முஸ்லிம் சமூகத்தினர் மசூதிகளில் தொழுகையில் ஈடுபடுவது அவர்களது விருப்பம். அப்போது ஒலி மாசு சட்டத்தை மீறி ஒலிபெருக்கிகளில் ஒலி எழுப்பினால், நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்காக மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை முழுமையாக அகற்றுவதற்கு உத்தரவிட முடியாது' என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story