முன்னாள் பிரதமர் நேருவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் காலமானார்
முன்னாள் பிரதமர் நேருவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் காலமானார்
புவனேஷ்வர்,
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இதனிடையே, 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜவகர்லால் நேரு பங்கேற்றார்.
கூட்டத்தின் பொது நேருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, ஒடிசா கவர்னரின் தனி டாக்டராக இருந்த கோபிந்தா சந்திர தாஸ், பிரதமர் நேருவுக்கு சிகிச்சை அளித்தார்.
டாக்டரின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த 6 நாட்களுக்கு அனைத்து நிகழ்ச்சியையும் ரத்து செய்த நேரு ஓய்வு எடுத்தார். அதன்பின், 1964 மே 27-ம் தேதி நேரு காலமானார்.
இந்நிலையில், நேருவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபிந்தா சந்திர தாஸ் நேற்று உயிரிழந்தார். 96 வயதான கோபிந்தா வயது முதர்வு காரணமாக காலமானார். டாக்டர் கோபிந்தா மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story