பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவிலை: மராட்டிய துணை முதல் மந்திரி விளக்கம்

பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவிலை: மராட்டிய துணை முதல் மந்திரி விளக்கம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த முறை 75 பேர் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தியதாக தகவல் வெளியனது.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறுஅவதாரம் எடுத்துள்ளனர்'' எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் பக்தர்கள் மீது போலீசார் தடியடி எதுவும் நடத்தவில்லை என்று மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com