இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை பயன்படுத்த திட்டம்..!


இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை பயன்படுத்த திட்டம்..!
x

எல்லையில் பகுதிகளில் தகவல் தொடர்புக்கு 5ஜி சேவையைப் பயன்படுத்த ,இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி ,

எல்லையில் பகுதிகளில் தகவல் தொடர்புக்கு 5ஜி சேவையைப் பயன்படுத்த ,இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.நாட்டில் தற்போது 4ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் விரைவில் 5ஜி அலைக்கற்றை அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது.ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது.

இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) மட்டுமே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் , 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதை எல்லையில் உள்ள படையினரின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புபடைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின் பரிந்துரைகளை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை பரிசீலித்து வருகின்றன. எல்லைப்பகுதிகளில் உள்ள படையினருடன் முக்கியமான தகவல் தொடர்புக்கு 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.


Next Story