இல்லந்தோறும் மூவண்ணக்கொடி திட்டத்தில் உற்சாகம் காட்டுவதற்கு மக்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!


இல்லந்தோறும் மூவண்ணக்கொடி திட்டத்தில் உற்சாகம் காட்டுவதற்கு மக்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!
x

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களின் இந்த உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

ரக்சாபந்தன் தினத்தையொட்டி இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு மூவண்ணக்கொடி வழங்குவது குறித்த வீடியோ ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

இந்தியர்கள் அனைவரும் மூவண்ணக்கொடியுடன் சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளனர். எனது அருமை இளம் நண்பர்களுக்கு, இன்று காலையில் மூவண்ணக்கொடியை வழங்கினேன். அவர்களது முகத்தில் கண்ட மகிழ்ச்சி இதன் சிறப்பை உணர்த்தியது! என்று குறிப்பிட்டுள்ளார்.


1 More update

Next Story