'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார், பிரதமர் மோடி


மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார், பிரதமர் மோடி
x

முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த கருத்துகளை அனுப்புமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இந்த மாதம் 31-ஆம் தேதி நடைபெறும் மன் கி பாத்- கான உள்ளீடுகள் உங்களிடம் உள்ளதா? அவற்றைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். MyGov அல்லது NaMo App இல் உங்கள் கருத்துகளை பகிரவும். 1800-11-7800 ஐ டயல் செய்து உங்கள் யோசனைகளைப் பதிவு செய்யவும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story