குஜராத்தில் பஸ், கார் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
குஜராத் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"நவ்சாரியில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உதவித் தொகையாக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.