உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!


வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

லக்னோ,

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைத்தார்.

இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து, அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும்.

மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டனார்.

மேற்குவங்கத்தின் கோல்கட்டா போன்ற முக்கிய நகரங்களில் உள்ள உலக பாரம்பரிய தளங்கள், தேசிய பூங்காக்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களை இந்த கப்பல் மூலமாக சென்று கண்டுகளிக்கலாம்.

மேலும், வாரணாசியின் கங்கை நதிக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 'டென்ட் சிட்டி' என்ற இடத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.இதனையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:

கங்கை நதியில் உலகின் மிக நீண்டதூர பயண கப்பல் சேவை துவங்கியிருப்பது ஒரு முக்கிய தருணமாகும்.

இன்றைய தினத்தில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும்.

'எம்.வி. கங்கா விலாஸ்' கப்பலில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளன.

இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது; இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Related Tags :
Next Story