நாக்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!


நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!
x

நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 2017-ம் ஆண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது.

இதனிடையே, நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்துவைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி, மாநில கவர்னர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story