பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
Published on

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.

இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com