மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்


மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்
x

மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.5 லட்சம் கோடியை மாநில அரசுகள் விரைவில் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. ஆனால் நாட்டின் வளர்ச்சியை முடுக்கி விடுவதில் முக்கிய பங்களிப்பு செய்கிற மின்சக்தி துறையைப் பலப்படுத்துவதற்கு இந்த நிலுவைத்தொகையை மாநிலங்கள், மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு உடனே செலுத்த வேண்டும்.

* மின்சார பயன்பாட்டுக்காக பல மாநிலங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்திருக்கின்றன. இந்த பணத்தை அவை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும். மின்வினியோக நிறுவனங்களுக்கு அரசின் பல்வேறு துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளன.

* கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி புதிதாக வந்து சேர்ந்துள்ளது. ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு, நாட்டின் வலிமையாக மாறி உள்ளது.

* 1 லட்சத்து 70 ஆயிரம் சுற்று கி.மீ. தொலைவுக்கு மின்பரிமாற்ற தடங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story