டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில், கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நல்ல உடல் நலம் நீண்ட ஆயுளுடன் கெஜ்ரிவால் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி துணை நிலை கவர்னர் சக்ஷேனாவும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சக்ஷேனா வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது; கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story