மாநில அரசுகள் மின்சார நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
மின்சார நிறுவனங்களின் நிலுவைத்தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
மாநில அரசுகள் மின்சார நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 2.5 லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மின்சார துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுகள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்காததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
மாநில அரசுகள் மின்சார நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 2.5 லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு செலுத்தாத காரணத்தினால் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 1,70,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் மின்சார இழப்பு அதிகமாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.