மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை என மின்சார ஸ்கூட்டருக்கு அபராதம் விதித்த போலீசார்


மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை என மின்சார ஸ்கூட்டருக்கு அபராதம் விதித்த போலீசார்
x
தினத்தந்தி 10 Sept 2022 1:20 AM IST (Updated: 10 Sept 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

மாசு கட்டுப்பாட்டு சான்றிதல் இல்லை என மின்சார ஸ்கூட்டருக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்த வகையில் தற்போது மின்சார கார், பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலில் அல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் இந்த வகை கார், பைக்குகள் மாசை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலஞ்சேரி பகுதியில் நேற்று மின்சார ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதல் இல்லை என கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 250 ரூபாய்க்கான அபராத ரசீதை போலீசார் ஸ்கூட்டர் உரிமையாளரிடம் வழங்கினர். மின்சார ஸ்கூட்டருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதல் தேவையில்லாதபோது மாசுகட்டுப்பாட்டு சான்றிதல் இல்லை என கூறி போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் ஸ்கூட்டரை ஓட்டிவந்த நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும், அதற்கான அபராத ரசீதுக்கு பதில் தவறுதலாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதல் இல்லை என ரசீது வழங்கப்பட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story