மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கோழி வளர்ப்பு தொழில்; பெண்கள் நலத்துறை மந்திரிக்கு அஸ்வத் நாராயண் கடிதம்


மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கோழி வளர்ப்பு தொழில்; பெண்கள் நலத்துறை மந்திரிக்கு அஸ்வத் நாராயண் கடிதம்
x

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கோழி வளர்ப்பு தொழில் மேற்கொள்ள ஊக்கம் அளிக்க வேண்டும் என்று பெண்கள் நலத்துறை மந்திரிக்கு அஸ்வத் நாராயண் கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சாருக்கு உயர்கல்வி-திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் குடும்பஸ்ரீ என்ற பெயரில் பெண்கள் சுயஉதவி குழு பெண்களுக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்ய அரசு உதவி செய்கிறது. அதே போல் கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கோழி வளர்ப்பு தொழில் மேற்கொள்ள ஊக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் இந்த தொழிலில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. கர்நாடகத்தில் 2 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

அதில் 30 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற்கொண்டால் அதன் மூலம் அவா்களின் பொருளாதாரம் பலம் பெறும். நமது மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு கோழி முட்டை வழங்கப்படுகிறது. இதற்கான கோழி முட்டைகளை மகளிர் சுயஉதவி குழுக்களிடம் இருந்து கொள்முதல் செய்யலாம். இந்த நோக்கத்தில் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.


Next Story