"5ஜி சேவையை தொடங்க தயாராகுங்கள்"- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி கடிதம்


5ஜி சேவையை தொடங்க தயாராகுங்கள்- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி கடிதம்
x

5ஜி சேவையை தொடங்க தயாராகும்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரத்து 78 கோடிக்கும்,ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரத்து 48 கோடிக்கும், வோடபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18 ஆயிரத்து 799 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

இந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க தயாராகும்படி மத்திய தொலைத் தொடர்பு மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர், "5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 5G சேவையை வழங்க தயாராகுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை கேட்டு கொள்கிறோம் " என தெரிவித்துள்ளார்.


Next Story