தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் நியமனம்


தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் நியமனம்
x

கோப்புப்படம்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

புதுடெல்லி,

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வருகிறார். மரபுப்படி சுப்ரீம் கோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.




Next Story