காமன்வெல்த் பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து


காமன்வெல்த்  பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
x

பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றிருந்தது.

தொடர்ந்து ஆண்களுக்கான பளு தூக்குதலின் (73 கிலோ) இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி பங்கேற்றார். இப்போட்டியில் அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 170 கிலோவும் தூக்கினார். அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டரில், அச்சிந்தா ஷூலி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அமைதியான இயல்பு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர். இந்த சிறப்பான சாதனைக்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, மூவர்ணக் கொடியை உயரப் பறக்கச் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் அச்சிந்தா ஷூலி. ஒரே முயற்சியில் தோல்வியை உடனே சமாளித்து வரிசையாக முதலிடம் பிடித்தீர்கள். நீங்கள் ஒரு சரித்திரம் படைத்த சாம்பியன். மனமார்ந்த வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டு உள்ளார்.



Next Story