ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி வாழ்த்து


ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி வாழ்த்து
x

ஜனாதிபதி தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.



சிம்லா,



நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.

வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், ஜனாதிபதி தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

நாட்டின் ஒரு வரலாற்று தருணமிது. இந்திய ஜனாதிபதியாக ஒரு பழங்குடியின பெண்ணை நியமனம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story