ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்து!


ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்து!
x

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் இரவுக்குள் அறிவிக்கப்பட்டன. அதில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவர்கள் இருவரும் 15 நிமிடங்கள் உரையாடினர்.

ஜனாதிபதி தேர்தலில் 2824 உறுப்பினர்கள் முர்முவுக்கு வாக்களித்தனர். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1877 பேர் வாக்களித்தனர். மீதமுள்ள 53 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்.


Next Story