மும்பை- நாக்பூர் விரைவு சாலை - வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்


மும்பை- நாக்பூர் விரைவு சாலை - வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
x

மும்பை - நாக்பூர் சாலையை பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கிறார்.

மும்பை,

மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ. நீளத்துக்கு பால்தாக்கரே மகாராஷ்டிரா சாம்ருத்தி மகாமார்க் 6 வழி விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த சாலை மும்பை - நாக்பூர் இடையே நாக்பூர், வார்தா, அமராவதி, வாசிம், புல்தானா, ஜல்னா, அவுரங்காபாத், நாசிக், அகமதுநகர், தானே ஆகிய 10 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. மேலும் சந்திராப்பூர், பண்டாரா, கோண்டியா, கட்சிரோலி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இந்த சாலையால் பயனடைகின்றன.

இந்தநிலையில் நாக்பூர் - மும்பை விரைவு சாலை திட்டத்தில் முதல் கட்டமாக நாக்பூர் - ஷீரடி இடையே 520 கி.மீ.க்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இது பொது மக்களுக்காக வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய சாலையை மக்களுக்கு அர்பணிக்கிறார்.

இதேபோல 11-ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கி வைக்கப்படுகிறது. அந்த விழாவிலும் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story