டெல்லி மந்திரியை சிறையில் சந்தித்தவர்களிடம் விசாரணை - பா.ஜனதா வலியுறுத்தல்


டெல்லி மந்திரியை சிறையில் சந்தித்தவர்களிடம் விசாரணை - பா.ஜனதா வலியுறுத்தல்
x

மசாஜ் செய்யப்பட்ட விவகாரத்தில் டெல்லி மந்திரியை சிறையில் சந்தித்தவர்களிடம் விசாரணை நடத்த பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மசாஜ் செய்யப்படுவது போலவும், பார்வையாளர்களை அவர் சந்திப்பது போலவும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசை பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினை சந்தித்தவர்களை விசாரிக்க வேண்டும் என டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நேர்மையற்றவர்களையும், குற்றவாளிகளையும் அம்பலப்படுத்த சில நேரம் கடவுளே தலையிடுகிறார். இந்த வீடியோ எப்படி, யார் மூலம் வெளியானது? என்பது கேள்வி இல்லை. மாறாக வீடியோவில் ஜெயின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதே கேள்வி' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'சிறையில் ஜெயினை சந்தித்தவர்களை விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும். இது மந்திரி மீதான வழக்குக்கு உதவும்' எனறும் கூறினார்.


Next Story