பி.டி.ஏ., ஊழல் வளர்ச்சி ஆணையமாக மாறிவிட்டது- காங்கிரஸ் குற்றச்சாட்டு


பி.டி.ஏ., ஊழல் வளர்ச்சி ஆணையமாக மாறிவிட்டது-  காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

பி.டி.ஏ., ஊழல் வளர்ச்சி ஆணையமாக மாறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-எடியூரப்பா இல்லாத பா.ஜனதா இயக்கம் முடிவடைந்துவிட்டது என்று கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் அவர் தற்போது டெல்லி சென்றுள்ளார். பா.ஜனதா ஊழல் விவகாரம் இறுதி நிலைக்கு வந்தது போல் தெரிகிறது. நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தும் ஊழல் குறித்து பா.ஜனதா அரசு வழக்கு போடும் தைரியத்தை வெளிப்படுத்துமா?. முனிரத்னா மானநஷ்ட வழக்கு தொடுப்பாரா?. போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட சில முக்கிய பிரமுகர்களுக்கு பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.) சார்பில் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வீட்டுமனை வழங்கப்பட்டது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனரை மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சியில் பெங்களூருவை சர்வதேச நகரமாக மாற்ற வேண்டிய பி.டி.ஏ., பா.ஜனதா ஆட்சியில் ஊழல் வளர்ச்சி ஆணையமாக மாறிவிட்டது.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Next Story