புதுச்சேரி: வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு

வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி: வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பழைய வாய்க்கால்களை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வசந்தம் நகர் பகுதியில் இன்று 16 தொழிலாளர்கள் வாய்க்கால் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த 7 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com