புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகம் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். கவர்னர் உரை மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறுமெனவும் என அவர் கூறினார்.
புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story