பஞ்சாப்: காவல் நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பஞ்சாப்: காவல் நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 10 Sep 2022 9:30 AM GMT (Updated: 10 Sep 2022 9:32 AM GMT)

பஞ்சாபில் ஹோஷியார்பூரில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சண்டிகர்,

பஞ்சாபில் ஹோஷியார்பூரில் உள்ள ஹரியானா காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சதீஷ் குமார் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் வைத்து தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் ஒரு வீடியோவையும் பதிவு செய்தார், அதில் தான் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு உள்ளார்.

அதாவது கடந்த வியாழன் அன்று தண்டா காவல் நிலையத்தின் அதிகாரியான ஓன்கர் சிங், ஒரு ஆய்வின் போது தன்னை அவமானப்படுத்தியதாகவும், அதனால், தான் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோஷியார்பூரில் உள்ள மூத்த போலீஸ் சூப்பிரண்டு சர்தாஜ் சிங் சாஹல், ஜூனியர் போலீசாக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் தன்னை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story