மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்: பைக்கில் சென்று கொண்டிருந்தவர் மீது காரால் மோதிய நபர் - பின்னால் இருந்தவர் உயிரிழப்பு


மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்: பைக்கில் சென்று கொண்டிருந்தவர் மீது காரால் மோதிய நபர் - பின்னால் இருந்தவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 6:57 PM IST (Updated: 6 Aug 2023 7:05 PM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர், அந்த நபர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரால் மோதியதில் பின்னால் இருந்தவர் உயிரிழந்தார்.

சங்ரூர்,

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் மனைவியுடன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர், அந்த நபர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரால் மோதியதில் பைக்கில் பின்னால் இருந்தவர் உயிரிழந்தார்.

முன்னதாக குல்தீப் சிங் மற்றும் அவரது மாமா பல்தேவ் சிங் இருவரும் மது வாங்கிவிட்டு மாலேர்கோட்லா சாலையில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த கருப்பு நிற கார் அவர்களது பைக் மீது மோதியது. இதில் பல்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த குல்தீப் சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காரை ஓட்டி வந்த ஜக்ஜித் சிங், தனது மனைவிக்கும் குல்தீப் சிங்கிற்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story