புத்தூர் டவுன் பஞ்சாயத்து பா.ஜனதா உறுப்பினர் தற்கொலை

கடன் தொல்லையால் புத்தூர் டவுன் பஞ்சாயத்து பா.ஜனதா உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டார்.
புத்தூர் டவுன் பஞ்சாயத்து பா.ஜனதா உறுப்பினர் தற்கொலை
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே சல்மாரா பகுதியை சேர்ந்தவர் சிவராம் (வயது 45). பா.ஜனதாவை சேர்ந்த இவர், புத்தூர் டவுன் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். மேலும் புத்தூர் மண்டல பா.ஜனதா ஓ.பி.சி. தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் கடன் வாங்கிய அவர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு அவரை தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சிவராம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சிவராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com