அசாமில் ராகிங் தொல்லை; விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்

அசாமில் ராகிங் தொல்லையால் விடுதி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அசாமில் ராகிங் தொல்லை; விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்
Published on

திப்ரூகார்,

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் அமைந்து உள்ள திப்ரூகார் பல்கலை கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மாணவர் ஆனந்த் சர்மா என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இதுபற்றி ஆனந்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதில், 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவரின் நிலை சிகிச்சைக்கு பின்னர் தேறி வருகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com