ராகுல்காந்தி முதலில் இந்திய வரலாற்றை படிக்க வேண்டும் - மத்திய மந்திரி அமித்ஷா


ராகுல்காந்தி முதலில் இந்திய வரலாற்றை படிக்க வேண்டும் - மத்திய மந்திரி அமித்ஷா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 Sept 2022 4:57 PM IST (Updated: 10 Sept 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, இந்திய வரலாற்றை படிக்க வேண்டும் என மத்திய மந்திரி அமித்ஷா விமர்சித்துள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் பாஜக கட்சியின் பூத் அளவிலான மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, "நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ராகுல் , இதை நீங்கள் எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். ராகுல் காந்தி பாரதத்தை இணைக்க சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றை படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் வெளிநாட்டு பிராண்டு டி-சர்ட் அணிந்து செல்கிறார். காங்கிரஸ் கட்சியினால் வளர்ச்சிக்காக பாடுபட முடியாது. அவர்களால் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே செயல்பட முடியும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Next Story