சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் ஜெய் பாரத் யாத்திரை - ராகுல் காந்தி முடிவு


சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில்  ஜெய் பாரத் யாத்திரை -  ராகுல் காந்தி முடிவு
x

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்துள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியினரை ராகுல் காந்தியின் இந்த யாத்திரை உற்சாகப்படுத்திய நிலையில், கர்நாடகாவிலும் யாத்திரை மேற்கொள்கிறார்.


Next Story